வீடுபுகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது


வீடுபுகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2023 6:45 PM GMT (Updated: 27 Oct 2023 6:46 PM GMT)

மங்களூரு அருகே வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-மங்களூரு அருகே வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு அருகே வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிறுவன ஊழியர்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கோனஜே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொஜப்பாடி பகுதியை சேர்ந்தவர் நவ்பால் (வயது32). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அரக்கலா பகுதி வழியாக வேலைக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில், கடந்த சில நாட்களாக அரக்கலா பகுதியை சேர்ந்த பெண்ணை நவ்பால் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதுகுறித்து அந்தபெண் அவரை கண்டித்துள்ளார்.

அதனை நவ்பால் கேட்காமல் பின் தொடர்ந்து சென்றுள்ளார். மேலும் அந்த பெண்ணின் வீட்டின் முன்பு அவர் நின்று வந்துள்ளார். இதையடு்த்து பெண்ணின் கணவர் அவரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்கள் 2 பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை நவ்பல் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். பி்ன்னர் மாலை வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அரக்கலா பகுதியில் அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

சுவர் ஏறி குதித்து

பின்னர் இரவு 10 மணிக்கு நவ்பல் அந்த பெண்ணின் வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றார். இதையடுத்து வீட்டின் மேற்கூரையை அவர் பிரித்து உள்ளே இறங்கினார். அப்போது ஒரு அறையில் பெண் தனது குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். இதையடுத்து நவ்பல் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது திடீரென அந்த பெண் கண் விழித்தார். அவர் நவ்பல் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கத்தி கூச்சலிட்டார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் நவ்பல் சுவர் ஏறி குதித்து தப்பி சென்றார். இதுகுறித்து அந்த பெண் கோனஜே போலீசிற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

வாலிபர் கைது

அதில், மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் வருவதும், பெண்ணின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்வதும், பின்னர் மீண்டும் வருவதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நவ்பல்லை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து கோனஜே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story