மங்களூரு; ரெயிலில் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை


மங்களூரு; ரெயிலில் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

மங்களூரு அருகே ரெயிலில் பாய்ந்து என்ஜீனியர் தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மங்களூரு-

மங்களூரு அருகே ரெயிலில் பாய்ந்து என்ஜீனியர் தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர் பிணம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள குபேவூர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே உள்ள தண்டவாளத்தில் வாலிபர் பிணம் ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் முல்கி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் முல்கி ரெயில்வே உதவி சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவா தலைமையில் சந்திரசேகர்,சங்கர்,பசவராஜ் ஆகிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது, அந்த மேம்பாலத்தின் கீழே ரெயில் வந்தது. பாலம் குறுகலாக இருந்ததால் ரெயில் வருவது அவர்களுக்கு தெரியவில்லை. இதனை கவனிக்க தவறிய போலீசார் உடலை எடுக்க முயற்சி செய்தனர். அப்போது ரெயில் அருகே வந்தபோது அதிர்ச்சி அடைந்த போலீசார் ரெயிலில் சிக்காமல் இருக்க அருகில் பள்ளத்தில் குதித்தனர். இதில், அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பிரேத பரிசோதனைக்காக

பின்னர் அவர்கள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முல்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த நபர் முல்கி ரெயில் நிலையத்தில் பணியாற்றி வரும் குமார் என்பவரின் மகன் விஷ்லேஷ் (வயது 26) என்பது தெரியவந்தது. அவர் தமிழ்நாடு கோவையில் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். தற்போது விஷ்லேஷ் தட்சிண கன்னடா மாவட்டம் சூரத்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

மேலும், அவர் வேலை தேடியும் வந்துள்ளார். இந்தநிலையில் தந்தையை பார்க்க முல்கி ரெயில் நிலையத்திற்கு விஷ்லேஷ் வந்துள்ளார். ரெயில் நிலையத்தில் குமாரை அவர் பார்த்துள்ளார். பின்னர் குபேவூர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே தண்டவாளத்தில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் பாய்ந்து விஷ்லேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை காரணம்

ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. வேலை கிடைக்காத விரக்தியில் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து முல்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story