பிரதமர் மோடி கலந்து கொள்ளும் மைசூரு யோகா தினவிழா: 15 ஆயிரம் பேர் வரை பங்கேற்க அனுமதி


பிரதமர் மோடி கலந்து கொள்ளும் மைசூரு யோகா தினவிழா: 15 ஆயிரம் பேர் வரை பங்கேற்க அனுமதி
x

பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் மைசூரு யோகா தினவிழாவில் 15 ஆயிரம் பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பகாதி கவுதம் தெரிவித்துள்ளார்.

மைசூரு:

ஆலோசனை கூட்டம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வருகிற 21-ந்தேதி மைசூரு அரண்மனையில் நடக்க உள்ள யோகா தினவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் மோடி வருகை, யோகா தினவிழா முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் மைசூரு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பகாதி கவுதம் தலைமையில் நடந்தது. இந்த கூட்டம் முடிந்து கலெக்டர் பகாதி கவுதம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

11 கமிட்டிகள் அமைப்பு

மைசூருவில் யோகா தினவிழாவில் கலந்து கொள்ள வருகிற 21-ந்தேதி பிரதமர் மோடி வருகிறார். இவர் வருகையையொட்டி முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்காக எனது தலைமையில் 11 கமிட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 11 கமிட்டிகளுக்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் மோடி வருகையையொட்டி போக்குவரத்து கட்டுப்பாடு, மக்கள் கூட்டம் கட்டுப்பாடு, யோகா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை அடங்கும். யோகா தினவிழாவில் 15 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா, போலீஸ் சூப்பிரண்டு சேத்தன், மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story