எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு: கோலார் தங்கவயலில், அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்


எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு:  கோலார் தங்கவயலில், அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
x

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையொட்டி கோலார் தங்க வயலில் அ.தி.மு.கவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கோலார் தங்கவயல்:

தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு யார் தலைமை என்பது குறித்த விவாதம் அக்கட்சியின் தொண்டர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கட்சியில் ஒற்றை தலைமை இருக்கவேண்டும் என்று முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கருதினார். அதன்படி ஜூலை 11-ந் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை கொண்டாடும் வகையில் நேற்று கோலார் தங்கவயல் அ.தி.மு.க. சார்பில் தாலுகா செயலாளர் பொன்சந்திரசேகர். ராபர்ட்சன்பேட்டை காந்தி சர்க்கிளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

1 More update

Next Story