யஷ்வந்தபுரம் ரெயில் என்ஜின் தடம் புரண்டது


யஷ்வந்தபுரம் ரெயில் என்ஜின் தடம் புரண்டது
x

கொப்பல் அருகே யஷ்வந்தபுரம் ரெயில் என்ஜின் தடம் புரண்டது.

பெங்களூரு:

பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் இருந்து தினமும் கொப்பல் மாவட்டம் கரடகிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோல் நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு யஷ்வந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட அந்த ரெயில் வழக்கமாக காலை 10.45 மணிக்கு கரடகி ரெயில் நிலையத்திற்கு வர வேண்டும். ஆனால் தாமதமாக அந்த ரெயில் பகல் 12.05 மணிக்கு அங்கு வந்தது.

அப்போது அந்த ரெயிலை மாற்றுப்பாதையில் திருப்ப முயற்சி நடந்தது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக யஷ்வந்தபுரம் ரெயிலின் என்ஜின் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டது. உடனே டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ஏற்கனவே மெதுவாக வந்த நிலையில் தடம்புரண்டதும் ரெயிலை டிரைவர் உடனே நிறுத்தியதால் பெரிய அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, ரெயில் என்ஜினை தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தடம்புரண்ட ரெயில் என்ஜின் தூக்கி நிலை நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story