நாசிக் தொழிற்சாலையில் போதைப்பொருள் தயாரித்த 12 பேர் கைது; ரூ.300 கோடி மெபட்ரோன் பறிமுதல்

நாசிக் தொழிற்சாலையில் போதைப்பொருள் தயாரித்த 12 பேர் கைது; ரூ.300 கோடி மெபட்ரோன் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Oct 2023 8:00 PM GMT (Updated: 6 Oct 2023 8:00 PM GMT)

நாசிக் தொழிற்சாலையில் போதைப்பொருள் தயாரித்து வந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த ரூ.300 கோடி மதிப்புள்ள மெபட்ரோனை பறிமுதல் செய்தனர்.

நாசிக்,

நாசிக் தொழிற்சாலையில் போதைப்பொருள் தயாரித்து வந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த ரூ.300 கோடி மதிப்புள்ள மெபட்ரோனை பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவல்

மும்பையில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக சிலரை போலீசார் அண்மையில் கைது செய்து இருந்தனர். இவர்களிடம் போலீசார் போதைப்பொருளை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தனர் என்பது குறித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் நாசிக் மாவட்டத்தில் ஷிண்டே காவ் எம்.ஐ.டி.சி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் போதைப்பொருள் தயாரித்து மும்பைக்கு வினியோகம் செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் மும்பை போலீசார் தனிப்படை அமைத்து நாசிக் சென்றனர்.

12 பேர் கைது

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சென்ற போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் அங்கு தயாரித்து வைக்கப்பட்டு இருந்த 151 கிலோ மெபட்ரோன் என்ற போதைப்பொருளை அவர்கள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.300 கோடியே 26 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் போதைப்பொருள் தயாரித்து வந்த நாசிக், ஐதராபாத் மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 12 பேரை பிடித்து கைது செய்தனர். மேலும் இதில் பலருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதால் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story