மும்பையில் மின்னல் தாக்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு

கோப்புப்படம்
மும்பையில் மின்னல் தாக்கியதில் 16 வயது சிறுவன் உயிரிழந்தார்.
மும்பை,
மும்பையின் ஜுஹு சவுபட்டி பகுதியில் மின்னல் தாக்கியதில் 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவன் சாண்டாகுரூஸில் உள்ள வகோலாவில் வசிக்கும் ஹசன் யூசுப் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பெருவிழாவின் கடைசி நாளான நேற்று ஜுஹு சவுபட்டி பகுதியில் விநாயகர் சிலை கரைப்பை பார்ப்பதற்காக அந்த சிறுவன் தனியாக வந்துள்ளார். இந்த நிலையில் கடற்கரையில் சிறுவன் தண்ணீர் அருகே நின்று கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் நடந்ததாகவும் அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






