மிளகாய் பொடி தூவி சைக்கிளில் சென்றவரிடம் வழிப்பறி செய்த 2 பேர் சிக்கினர்- கிரெடிட் கார்டு மூலம் ரூ.1½ லட்சம் அபேஸ்


மிளகாய் பொடி தூவி சைக்கிளில் சென்றவரிடம் வழிப்பறி செய்த 2 பேர் சிக்கினர்- கிரெடிட் கார்டு மூலம் ரூ.1½ லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 20 Sep 2022 10:30 PM GMT (Updated: 20 Sep 2022 10:30 PM GMT)

தானே மாவட்டம் பிவண்டியைில் மிளகாய் பொடி தூவி சைக்கிளில் சென்றவரிடம் வழிப்பறி செய்த 2 பேர் சிக்கினர்

தானே,

தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் 2-ந் தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் அவரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். பின்னர் அவரிடம் இருந்த செல்போன்கள், கிரிடெட் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் போன்றவை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர் நார்போலி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருட்டு போன செல்போனில் இருந்து வேறொரு நம்பர் மூலம் அழைப்புகள் சென்றதை போலீசார் கண்டறிந்தனர். மேலும் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டதாக தெரியவந்தது.

இதன்படி போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை நடத்தியதில் 2 பேரின் அடையாளம் தெரியவந்தது. கடந்த 18-ந் தேதி மினாஜூல் ஹக் (வயது25), சாரிமுதீன் ரகுமான் (23) ஆகிய 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் இருந்து செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story