சம்பளம் வழங்காததை கண்டித்து சர்க்கரை ஆலை முன் 22 ஊழியர்கள் தீக்குளிக்க முயற்சி


சம்பளம் வழங்காததை கண்டித்து சர்க்கரை ஆலை முன் 22 ஊழியர்கள் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 16 Oct 2023 7:30 PM GMT (Updated: 16 Oct 2023 7:30 PM GMT)

சம்பளம் வழங்காததை கண்டித்து சர்க்கரை ஆலை முன் 22 ஊழியர்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லாத்தூர்,

சம்பளம் வழங்காததை கண்டித்து சர்க்கரை ஆலை முன் 22 ஊழியர்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சர்க்கரை ஆலை ஊழியர்கள்

லாத்தூர் மாவட்டம் ரெனாப்பூர் தாலுகா பங்கோனில் பன்னகேஷ்வர் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் உள்ள பாதுகாப்பு மற்றும் மின் துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இந்தநிலையில் இந்த ஆலை ஊழியர்கள் நேற்று ஆலையின் முன்பு போராட்டத்தில் இறங்கினர். அப்போது போராட்டத்தில் கலந்துகொண்ட 22 ஊழியர்கள் தங்கள் உடலில் பெட்ரோல் மற்றும் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தடுத்து நிறுத்தம்

ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற ஊழியர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இது குறித்து போராட்டக்காரர்கள் கூறியதாவது:- கடந்த 15 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்றும், வருங்கால வைப்பு நிதியை கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த 25-ந் தேதி ஆலை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story