பயந்தரில் மரம் விழுந்து ஒருவர் பலி- மனைவி, மகள் உயிர் தப்பினர்

பயந்தரில் மரம் விழுந்து ஒருவர் பலியானார். அவரது மனைவி, மகள் உயிர் தப்பினர்.
மும்பை,
பயந்தரில் மரம் விழுந்து ஒருவர் பலியானார். அவரது மனைவி, மகள் உயிர் தப்பினர்.
மரம் சாய்ந்தது
தானே மாவட்டம் பயந்தர் உத்தன் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்க் (வயது 52). இவர் நேற்று காலை 6.30 மணி அளவில் தனது மனைவி, மகளுடன் வீட்டின் அருகே நின்று பேசி கொண்டிருந்தார். கடந்த 2 நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக அங்கு நின்றிருந்த மரம் ஒன்று திடீரென வேறொடு சரிந்தது.
அப்போது அங்கு நின்ற பாண்டுரங்க், அவரது மனைவி மற்றும் மகள் மீது மரம் விழுந்து அமுக்கியது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பாண்டுரங்க் உள்பட 3 பேரையும் மீட்டனர்.
சாவு
இதில் தலையில் பலத்த காயமடைந்த பாண்டுரங்கை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். அவரது மனைவி, மகள் காயமின்றி உயிர் தப்பினர்.
இது குறித்து உத்தன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






