பண்டாராவில் பெண்ணை கடத்தி கூட்டு பலாத்கார விவகாரம்: 2 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்


பண்டாராவில் பெண்ணை கடத்தி கூட்டு பலாத்கார விவகாரம்: 2 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்
x

பண்டாராவில் பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பண்டாரா,

பண்டாராவில் பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பெண் கற்பழிப்பு

கோண்டியா மாவட்டத்தை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கடந்த 1-ந் தேதி கணவரை விட்டு பிரிந்து வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் சகோதரன் வீட்டிற்கு செல்ல அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றார். அப்போது அங்கு வேனில் வந்த ஸ்ரீராம் ஊர்குடே என்பவர் சகோதரனின் வீட்டில் விடுவதாக கூறி அழைத்து சென்றார்.

ஆனால் அவரை பண்டாரா மாவட்டத்திற்கு கடத்தி சென்று கற்பழித்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் சென்று புகார் அளித்தார். ஆனால் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் விசாரணை என்ற பெயரில் இரவு முழுவதும் தங்க வைத்ததாகவும், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை, உணவு வசதி செய்து தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

கூட்டு பலாத்காரம்

மறுநாள் காலையில் தேநீர் அருந்த செல்வதாக கூறி அப்பெண் வெளியே சென்றார். ஆனால் போலீஸ் நிலையம் திரும்பி வரவில்லை. இதனை கவனிக்காத போலீசார் அப்பெண்ணை தேடாமல் பணியில் அலட்சியமாக இருந்தனர். இந்த நிலையில் நெடுஞ்சாலை ஓட்டல் ஒன்றில் நின்ற அப்பெண்ணை முகமது அன்சாரி (22), அமித் சுர்வே (30) ஆகிய 2 பேரும் சேர்ந்து கடத்தி சென்று கற்பழித்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் அப்பெண்ணை நடுரோட்டில் கைவிட்டு சென்றனர்.

அப்பெண்ணை போலீசார் மீட்டு நாக்பூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பணி இடைநீக்கம்

இதற்கிடையில் போலீசார் விசாரணை நடத்தி கற்பழித்த அன்சாரி மற்றும் அமித் சுர்வே ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் கவனத்திற்கு சென்றது.

இதையடுத்து மாநில ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டன்டாக இருக்கும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ரக்சுதா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மற்றொரு போலீஸ்காரரை பணி இடமாற்றம் செய்து பண்டாரா போலீஸ் சூப்பிரண்டு லோகித் மாதானி உத்தரவிட்டார்.

--------------

1 More update

Next Story