மலாடு முதல் தகசிர் வரையில் 31-ந் தேதி குடிநீர் வினியோகம் ரத்து


மலாடு முதல் தகசிர் வரையில் 31-ந் தேதி குடிநீர் வினியோகம் ரத்து
x

பைப்லைனில் பராமரிப்பு பணியால் வருகிற 31-ந்தேதி முதல் மலாடு முதல் தகசிர் வரை குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

பைப்லைனில் பராமரிப்பு பணியால் வருகிற 31-ந்தேதி முதல் மலாடு முதல் தகசிர் வரை குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

பராமரிப்பு பணி

வருகிற ஜூன் மாதம் முதல் மழைக்காலம் தொடங்கும் நிலையில் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 37 சதவீதம் இருப்பு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. குடிநீர் வினியோகத்தில் தடை ஏற்படாமல் இருக்க பைப்லைனில் பராமரிப்பு பணியை அவ்வப்போது மாநகராட்சி நடத்தி வருகிறது.

இந்த நிலையில் குடிநீர் வழங்கும் மெயின் பைப்லைனில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணி வருகிற 31-ந்தேதி காலை 8.30 மணி முதல் தொடங்கி மறுநாள் 1-ந்தேதி காலை 8.30 மணி வரை 24 மணி நேரம் நடைபெற உள்ளது.

24 மணி நேரம் ரத்து

இதன் காரணமாக மும்பையின் ஓரிரு இடங்களில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கையில், "பைப்லைனில் பராமரிப்பு பணி நடைபெறும் 24 மணி நேரமும் மலாடு, காந்திவிலி, போரிவிலி, தகிசர் ஆகிய இடங்களில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக செலவழித்து ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.


Next Story