மாநகராட்சி காவலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


மாநகராட்சி காவலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 March 2023 12:15 AM IST (Updated: 26 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பை,

நவிமும்பையில் குடிபட்வா கொண்டாட்டத்தையொட்டி பல இடங்களில் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. சட்டவிரோதமாக நகரில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை சம்பவத்தன்று மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஐரோலி பகுதியில் 40 வயது மாநகராட்சி காவலாளி, மற்ற ஊழியர்களுடன் சட்டவிரோத பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் தங்களின் பேனரை அகற்றி கொண்டு இருந்த காவலாளி மற்றும் ஊழியர்களை அவதூறாக பேசினர். மேலும் அவர்கள் காவலாளியை தாக்கினர்.

இந்த சம்பவம் குறித்து காவலாளி ரபாலே போலீசில் புகார் அளித்தார். போலீசார் சட்டவிரோத பேனரை அகற்றிய மாநகராட்சி காவலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story