எம்.பி.யை தற்கொலைக்கு தூண்டியதாக தத்ரா நகர் ஹவேலி நிர்வாக அதிகாரி மீதான வழக்கு ரத்து- ஐகோர்ட்டு உத்தரவு

எம்.பி.யை தற்கொலைக்கு தூண்டியதாக தத்ரா நகர் ஹவேலி நிர்வாக அதிகாரி  மீதான வழக்கு ரத்து- ஐகோர்ட்டு உத்தரவு
x

மோகன் தெல்கர் எம்.பி.யை தற்கொலைக்கு தூண்டியதாக தத்ரா நகர் ஹவேலி நிர்வாக அதிகாரி உள்பட 9 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மோகன் தெல்கர் எம்.பி.யை தற்கொலைக்கு தூண்டியதாக தத்ரா நகர் ஹவேலி நிர்வாக அதிகாரி உள்பட 9 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

எம்.பி. தற்கொலை

மும்பை, குஜராத் எல்லையில் உள்ள யூனியன் பிரேதமான தத்ரா மற்றும் நகர் ஹவேலியின் எம்.பி.யாக இருந்தவர் மோகன் தெல்கர். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந் தேதி மும்பை மெரின் டிரைவ் பகுதியில் ஓட்டலில் பிணமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

எம்.பி.யின் மரணம் தொடர்பாக மும்பை போலீசார் தத்ரா மற்றும் நகர் ஹவேலியின் நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா பட்டேல் மற்றும் அப்போதைய கலெக்டர் சந்தீப் சிங், அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு சரத் தரடே உள்ளிட்ட 9 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

9 பேர் மீதான வழக்கு ரத்து

இந்தநிலையில் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி 9 பேரும் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பி.பி. வாரலே, குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

இதில் மனுவை விசாரித்த நீதிபதிகள் மோகன் தெல்கர் எம்.பி.யை தற்கொலைக்கு தூண்டியதாக நிர்வாக அதிகாரி பிரபுல் கோடோ பட்டேல் உள்பட 9 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.

Next Story