முதல்-மந்திரி குடும்பத்தினர் குறித்து அவதூறு பரப்பியவர் மீது வழக்குப்பதிவு


முதல்-மந்திரி குடும்பத்தினர் குறித்து அவதூறு பரப்பியவர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தானே,

தானே மாநகராட்சி கடந்த 25-ந் தேதி பஞ்ச் பகாடி பகுதியில் ஒரு இனிப்பு கடையின் சட்டவிரோத பகுதியை இடித்து அகற்றியது. இந்த நிலையில் தர்மராஜிய கட்சியை சேர்ந்த அஜய் ஜெயா என்பவர் மாநகராட்சியின் இந்த செயலுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிட்டு இருந்தார். அதில், முதல்-மந்திரியின் உறவினர்கள் குறிப்பிட்ட அந்த கடையில் தகராறு செய்ததாகவும், இதை தொடர்ந்து அந்த இனிப்பு கடை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் இதுகுறித்து அந்த இனிப்பு கடையின் உரிமையாளர் நவுபாடா போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் " அப்பகுதியில் தனது கடை உள்பட பல கடைகளுக்கு எதிராக மாநகராட்சி இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

முதல்-மந்திரியின் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த அஜய் ஜெயா முயற்சிக்கிறார்" என தெரிவித்து இருந்தார். இதையடுத்து முதல்-மந்திரி குடும்பத்தை அவதூறு பேசியதாக அஜய் ஜெயா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1 More update

Next Story