10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு


10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு
x
தினத்தந்தி 19 Sep 2022 10:30 PM GMT (Updated: 19 Sep 2022 10:30 PM GMT)

மராட்டியத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

மும்பை,

மராட்டியத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டு தோறும் மாநில கல்வி வாரியம் சார்பில் பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் முன்கூட்டியே பொது தேர்வு கால அட்டவணை வெளியிடப்படுகிறது.

எனவே இந்த கல்வியாண்டில் நடைபெற உள்ள 12, 10-ம் வகுப்பு பொது தேர்வு கால அட்டவணையை மாநில கல்வி வாரியம் நேற்று வெளியிட்டது.

இதன்படி 12-ம் வகுப்பு பொது தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 21-ந் தேதி தொடங்கி மார்ச் 20-ந் தேதி வரை நடக்கிறது. இதேபோல 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 2-ந் தேதி தொடங்கி மார்ச் 25-ந் தேதி வரை நடைபெறும் என கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது. மேலும் பொது தேர்வு தொடர்பான விரிவான கால அட்டவணை கல்வி வாரிய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


Next Story