மும்பை கடலில் உள்ள ஹாஜி அலி தர்காவில் உலகின் உயரமான தேசிய கொடி கம்பம் அமைக்க முடிவு


மும்பை கடலில் உள்ள ஹாஜி அலி தர்காவில் உலகின் உயரமான தேசிய கொடி கம்பம் அமைக்க முடிவு
x

மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் உலகின் உயரமான தேசிய கொடி கம்பம் நிறுவப்பட உள்ளது.

மும்பை,

மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் உலகின் உயரமான தேசிய கொடி கம்பம் நிறுவப்பட உள்ளது.

உயரமாக கொடி கம்பம்

மும்பை ஒர்லி பகுதியில் பிரசித்தி பெற்ற ஹாஜி அலி தர்கா உள்ளது. கடலில் அமைந்து உள்ள இந்த தர்காவுக்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பிற மதங்களை சேர்ந்த மக்களும் சென்று வருகின்றனர். தற்போது இங்கு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் ஹாஜி அலி தர்காவில் உலகிலேயே உயரமான கொடி கம்பம் நிறுவப்பட உள்ளதாக அதன் அறங்காவலர் சோகைல் கந்த்வானி கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இதுதொடர்பாக நான் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக இருந்த போது (2014-19) அவரிடம் ஆலோசித்தேன். ஹாஜி அலி தர்கா வளாகத்தில் உலகின் மிக உயர தேசிய கொடி கம்பம் நிறுவும் யோசனை அவருக்கும் பிடித்து இருந்தது. எனவே நேற்று முன்தினம் அவரிடம் மீண்டும் அந்த திட்டத்தை நினைவுப்படுத்தினேன். அவர் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

மோடி திறந்து வைப்பார்

உலகின் உயரமான தேசிய கொடி கம்பத்தை திறந்து வைக்க பிரதமர் மோடியை அழைப்போம். இந்த பணியில் பல துறையினர் செயல்படுவார்கள். தர்காவை சுற்றி கடல் உள்ளதால், கொடி கம்பம் வைக்க அதிக தளவாடங்கள் தேவைப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது உலகிலேயே பெரிய கொடி கம்பம் எகிப்து தலைநகர் கைரோவில் உள்ளது. அந்த கொடி கம்பத்தின் உயரம் 201.952 மீட்டர் ஆகும். அடுத்தபடியாக சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் 171 மீட்டர் கொடி கம்பம் உள்ளது. இந்த கம்பங்களை விட உயரமாக ஹாஜி அலி தர்காவில் கொடி கம்பம் நிறுவப்பட உள்ளது.


Next Story