கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.28 லட்சம் லஞ்சம் கேட்ட என்ஜினீயர் கைது- சோதனையில் ரூ.1½ கோடி சிக்கியது

கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.28 லட்சம் லஞ்சம் கேட்ட என்ஜினீயர் கைது- சோதனையில் ரூ.1½ கோடி சிக்கியது
x

சமையல் கூடம் கட்டுவதற்கு ஒப்பந்ததாரரிடம் ரூ.28 லட்சம் லஞ்சம் கேட்ட என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீடுகளில் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 48 லட்சம் சிக்கியது.

நாசிக்,

சமையல் கூடம் கட்டுவதற்கு ஒப்பந்ததாரரிடம் ரூ.28 லட்சம் லஞ்சம் கேட்ட என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீடுகளில் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 48 லட்சம் சிக்கியது.

லஞ்சம் கேட்ட என்ஜினீயர்

மராட்டிய பழங்குடியினர் மேம்பாட்டு துறையில் செயல் என்ஜினீயராக இருந்து வருபவர் தினேஷ்குமார் (வயது 50). இவர் நாசிக் திக்டே காலனியில் வசித்து வருகிறார். ஹர்சுலில் பழங்குடியினர் நலத்துறை விடுதியில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது

இந்த கட்டிடத்தை கட்டும் ஒப்பந்ததாரரிடம் என்ஜினீயர் தினேஷ்குமார் ரூ.28 லட்சத்து 80 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

போலீசாரிடம் சிக்கினார்

அவரிடம் ஒப்பந்ததாரர் பணம் தருவதாக கூறி விட்டு சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் யோசனைப்படி என்ஜினீயரை அவரது வீட்டில் சந்தித்து பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் நாசிக் மற்றும் புனேயில் உள்ள வீடுகளில் இருந்து ரூ.1 கோடியே 46 லட்சம் ரொக்கம் சிக்கியது.

இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாளை (திங்கட்கிழமை) வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story