அரசு பஸ் ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - முதல்-மந்திரி ஷிண்டே ஒப்புதல்


அரசு பஸ் ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - முதல்-மந்திரி ஷிண்டே ஒப்புதல்
x
தினத்தந்தி 8 Sep 2023 8:00 PM GMT (Updated: 8 Sep 2023 8:00 PM GMT)

அரசு பஸ் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த மாநில முதல்- மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஒப்புதல் வழங்கி உள்ளார்.

மும்பை,

விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த மாநில முதல்- மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஒப்புதல் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக முதல்-மந்திரி அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மாநில அரசு ஊழியர்களை போல அரசு பஸ் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 34 சதவீதத்தில் இருந்து உயர்த்தி 38 சதவீதமாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.9 கோடி கூடுதல் சுமை ஏற்படும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் பல மாதங்களாக ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாமல் போனது. மேலும் 3 மற்றும் 4 மாதங்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story