மக்களவையில் காலியாக உள்ள புனே, சந்திராப்பூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லையா? - ஆதித்ய தாக்கரே கேள்வி


மக்களவையில் காலியாக உள்ள புனே, சந்திராப்பூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லையா? - ஆதித்ய தாக்கரே கேள்வி
x
தினத்தந்தி 9 Oct 2023 7:30 PM GMT (Updated: 9 Oct 2023 7:31 PM GMT)

புனே, சந்திராப்பூர் மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லையா? என்று முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.

மும்பை,

புனே, சந்திராப்பூர் மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லையா? என்று முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.

சட்டசபைகளுக்கு தேர்தல்

சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து உத்தப் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- இந்தியா கூட்டணி என்பது 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா. ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியாகும். பிரிவுகளை உருவாக்கி, அரசியலமைப்பை மாற்றி, நமது ஜனநாயகத்தையும் நாட்டையும் சேதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு இந்தியா அல்லது பாரதம் வாக்களிக்காது. அது இந்தியா கூட்டணியால் உறுதியளிக்கப்பட்ட அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக வாக்களிக்கும்.

புனே, சந்திராப்பூர்

5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மராட்டியத்தில் உள்ள புனே மற்றும் சந்திராப்பூர் மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லையா?. இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார். கடந்த மார்ச் மாதம் பா.ஜனதா எம்.பி. கிரிஷ் பாபட் மரணத்தால், புனே மக்களவை தொகுதி காலியானது. இதேபோல கடந்த மே மாதம் காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் தனோர்கர் இறந்ததால் சந்திராப்பூர் தொகுதி காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story