இந்தி சினிமா நகைச்சுவை நடிகர் மரணம்


இந்தி சினிமா நகைச்சுவை நடிகர் மரணம்
x
தினத்தந்தி 22 Sep 2022 5:45 AM GMT (Updated: 22 Sep 2022 5:46 AM GMT)

பிரபல நகைச்சுவை நடிகரான ராஜூ ஸ்ரீவஸ்தவா மரணம் அடைந்தார்.

மும்பை,

பிரபல நகைச்சுவை நடிகரான ராஜூ ஸ்ரீவஸ்தவா மரணம் அடைந்தார்.

மயங்கி விழுந்தார்

இந்தி திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகராக விளங்கியவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா. இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவர் சுயநினைவின்றியே இருந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டது. செயற்கை சுவாச கருவி உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். சில தினங்களுக்கு முன்பு ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு சுயநினைவு திரும்பி உள்ளதாகவும், உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தனர்.

திடீர் மரணம்

இந்த நிலையில் நேற்று காலை ராஜூ ஸ்ரீவஸ்தவா உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்து உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 59. ராஜூ ஸ்ரீவஸ்தவா மறைவு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் திரையுலகினர் வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


Next Story