இன்று முதல் தண்ணீர் குடிப்பதை கூட நிறுத்துவேன்; மராத்தா போராட்டக்காரர் எச்சரிக்கை
இன்று முதல் தண்ணீர் குடிப்பதையும், மருந்து சாப்பிடுவதையும் கூட நிறுத்துவேன் என்று மனோஜ் ஜரங்கே கூறியுள்ளார்
ஜல்னா,
மராத்தா சமூதாயத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு ஜல்னாவில் அந்த சமூகத்தினர் சமீபத்தில் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதற்கிடையே ஜல்னா மாவட்டம் அந்தர்வாலி சரதி கிராமத்தில் இடஒதுக்கீடு கேட்டு உண்ணாவிரதம் இருந்து வரும் மனோஜ் ஜரங்கே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயுடன் வெள்ளிக்கிழமை இரவு எங்களது பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க முடியாது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் குன்பி சாதி சான்றிதழ் வழங்கும் வரை எனது உண்ணாவிரத போராட்டம் தொடரும். நாளை (இன்று) முதல் நான் தண்ணீர் குடிப்பதையும், மருந்து சாப்பிடுவதையும் நிறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story