ரோகித் பவாரின் நிறுவனத்தை மூட இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு


ரோகித் பவாரின் நிறுவனத்தை மூட இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Sep 2023 7:30 PM GMT (Updated: 29 Sep 2023 7:30 PM GMT)

ரோகித் பவாரின் நிறுவனத்தை மூட மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.

மும்பை,

ரோகித் பவாரின் நிறுவனத்தை மூட மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சரத்பவாரின் பேரனும், எம்.எல்.ஏ.வுமான ரோகித் பவாருக்கு சொந்தமான பாராமதி ஆக்ரோ நிறுவனம் கால்நடை தீவனம், சர்க்கரை, எத்தனால் உற்பத்தியில் ஈடுபட்டு வந்தது. அந்த நிறுவனத்தை மூட மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து நிறுவனம் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் அரசியல் அழுத்தம், தற்போது நிலவும் அரசியல் சூழலில் நிறுவன இயக்குனருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நிறுவனத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூட உத்தரவிட்டு உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. நிறுவனத்தின் விளக்கத்தை கேட்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துவிட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இடைக்கால தடை

அதே நேரத்தில் நிறுவனத்தில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதால் அதை மூட உத்தரவிட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் கூறப்படுகிறது. இந்த மனு நீதிபதி நிதின் ஜாம்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை அடுத்த மாதம் 6-ந் தேதி விசாரிப்பதாக கூறிய நீதிபதிகள் அதுவரை ரோகித் பவார் நிறுவனத்தை மூட இடைக்கால தடை விதித்தனர்.


Next Story