நள்ளிரவில் தெருவில் சுற்றுவது குற்றமல்ல-கோர்ட்டு உத்தரவு


நள்ளிரவில் தெருவில் சுற்றுவது குற்றமல்ல-கோர்ட்டு உத்தரவு
x

மும்பை போன்ற நகரில் நள்ளிரவில் தெருவில் சுற்றுவது குற்றமல்ல என கோர்ட்டு உத்தரவில் கூறியுள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மும்பை போன்ற நகரில் நள்ளிரவில் தெருவில் சுற்றுவது குற்றமல்ல என கோர்ட்டு உத்தரவில் கூறியுள்ளது.

வாலிபர் மீது வழக்கு

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சுமித் (வயது29). இவர் கடந்த 13-ந் தேதி நள்ளிரவு தென்மும்பை பகுதியில் நின்று கொண்டு இருந்து உள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து உள்ளனர். மேலும் அவர் முகத்தை மறைத்து குற்றத்தில் ஈடுபடும் நோக்கத்தோடு இரவில் சுற்றியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை கிர்காவ் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. அப்போது போலீஸ் தரப்பில் சுமித் குற்றத்தில் ஈடுபடும் நோக்கில் முகத்தை மூடியிருந்ததாக கூறப்பட்டது.

நள்ளிரவில் சுற்றுவது குற்றமல்ல

எனினும் இதை ஏற்க மறுத்த மாஜிஸ்திரேட்டு நதீம் பாட்டீல், " குற்றம்சாட்டப்பட்டவர் நள்ளிரவு 1.30 மணியளவில் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை போன்ற நகரில் 1.30 மணி மிகவும் தாமதமான நேரமல்ல. யார் வேண்டுமானும் ரோட்டில் நிற்கலாம். இரவு நேர ஊடரங்கு இல்லாத போது, நள்ளிரவில் தெருவில் சுற்றுவது குற்றமல்ல. எனவே அவர் தனது அடையாளத்தை மறைத்து குற்றத்தில் ஈடுபடும் நோக்கத்துடன் நின்றார் என கூற முடியாது.

இதுகொரோனா காலம். பொது மக்கள் பாதுகாப்புக்காக முககவசம் அணிகின்றனர். எனவே முககவசம் இல்லாதவர்கள் கைக்குட்டையால் முககவசமாக பயன்படுத்தலாம். எனவே குற்றம்சாட்டப்பட்டவரும் கைகுட்டையை முககவசமாக வாயை மறைத்து இருக்கலாம், அதற்காக அவர் அடையாளத்தை மறைத்தார் என கூறமுடியாது. " என கூறி சுமித்தை வழக்கில் இருந்து விடுவித்தார்.


Next Story