சரத்பவாரிடம் முதல்-மந்திரி பதவியை கேட்டு பெற்றவர் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே சொல்கிறார்


சரத்பவாரிடம் முதல்-மந்திரி பதவியை கேட்டு பெற்றவர் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே சொல்கிறார்
x
தினத்தந்தி 25 Oct 2023 7:45 PM GMT (Updated: 25 Oct 2023 7:45 PM GMT)

சரத்பவாரிடம் முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே கேட்டு பெற்றார் என்று ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மும்பை,

சரத்பவாரிடம் முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே கேட்டு பெற்றார் என்று ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

முதல்-மந்திரி பதவி

2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஏக்நாத் ஷிண்டேவை முதல்-மந்திரியாக்க உத்தவ் தாக்கரே திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் அதை மகா விகாஸ் அகாடியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இதனால் தான் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார் என்றும் அப்போது கூறப்பட்டது. இந்தநிலையில் ஆசாத் மைதானத்தில் சிவசேனா தலைமையிலான தசரா பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

கேட்டு பெற்றார்

2004-ம் ஆண்டு முதல்-மந்திரியாக ஆக வேண்டும் என்பது உத்தவ் தாக்கரேவின் ஆசை, ஆனால் அதற்கான அவரது முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. அவர் முதல்-மந்திரி பதவிக்கு ஆர்வம் காட்டாதது போல பாசாங்கு செய்தார். 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சரத்பவாரின் ஆலோசனையின் பேரில் அவர் முதல்-மந்திரி பதவி ஏற்றுக் கொண்டதாக பகிரங்கமாக கூறப்பட்டது. ஆனால் உண்மை என்னவென்றால், சரத்பவாரிடம், உத்தவ் தாக்கரேவை அந்த பதவிக்கு பரிந்துரைக்க 2 நபர்கள் அனுப்பப்பட்டனர். இதன்மூலம் அவர் முதல்-மந்திரியானார். அவர் சரத்பவாரிடம் பதவியை கேட்டு பெற்றார். உத்தவ் தாக்கரே பல முகமூடிகளை அணிந்துகொண்டு, நேர்மையாக இருப்பதுபோன்ற முகத்துடன் நுட்பமான அரசியலை செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story