மாடுகளுக்கு பரவும் தோல் கட்டி நோய் மும்பைக்குள் நுழைந்தது


மாடுகளுக்கு பரவும் தோல் கட்டி நோய் மும்பைக்குள் நுழைந்தது
x
தினத்தந்தி 23 Sep 2022 5:15 AM GMT (Updated: 23 Sep 2022 5:16 AM GMT)

மராட்டிய மாநிலத்தில் மாடுகளுக்கு பரவும் லம்பி எனப்படும் தோல் கட்டி நோய் பரவி வருகிறது

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மாடுகளுக்கு பரவும் லம்பி எனப்படும் தோல் கட்டி நோய் பரவி வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதில் மும்பைக்குள் தோல் நோய் பரவுவதை தடுக்க இறைச்சிக்காக எருமை மாடுகளை நகருக்குள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் மும்பைக்குள் தோல் கட்டி நோய் நுழைந்தது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கார் பகுதியில் உள்ள கால்நடைக்கு நோய் கண்டறியப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே மும்பையில் 24 ஆயிரத்து 388 எருமை, 2 ஆயிரத்து 203 பசு மாடுகள் உள்பட 27 ஆயிரத்து 500 கால்நடைகள் உள்ளன. இதில் பசுமாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. மற்ற கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருவதாகவும் கூறியுள்ளது.


Next Story