நிலத்தகராறு: வசாயில் தந்தை, மகன் தற்கொலை - 3 பேர் கைது


நிலத்தகராறு: வசாயில் தந்தை, மகன் தற்கொலை - 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sep 2023 7:30 PM GMT (Updated: 23 Sep 2023 7:30 PM GMT)

நிலத்தகராறு காரணமாக தந்தை, மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

நிலத்தகராறு காரணமாக தந்தை, மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

பால்கர் மாவட்டம் வசாய் முல்காவ் பகுதியை சேர்ந்தவர் எட்வின் டிசோசா (வயது55). இவரது மகன் குணால் (25). நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்துகொண்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களது டிவுசர் பாக்கெட்டில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

3 பேர் கைது

தற்கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் எழுதிய அந்த கடிதத்தில், " நிலத்தகராறு காரணமாக சுவப்னில், ரவிக்குமார், நயூம் ஆகிய 3 பேர் தங்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், நாளுக்கு நாள் அவர்களின் நச்சரிப்பு அதிகமான காரணத்தால் தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவுக்கு தாங்கள் தள்ளப்பட்டதாகவும்" கூறி இருந்தனர். இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் தற்கொலைக்கு துண்டியதாக 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். நிலத்தகராறில் தந்தை, மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story