லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு மேலும் ஒருவர் ஜம்மு-காஷ்மீரில் கைது- மராட்டிய பங்கரவாத தடுப்பு படை நடவடிக்கை


லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு மேலும் ஒருவர் ஜம்மு-காஷ்மீரில் கைது- மராட்டிய பங்கரவாத தடுப்பு படை நடவடிக்கை
x

லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு வேலை செய்த மேலும் ஒருவரை ஜம்மு-காஷ்மீரில் வைத்து மராட்டிய பங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு வேலை செய்த மேலும் ஒருவரை ஜம்மு-காஷ்மீரில் வைத்து மராட்டிய பங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.

ஆள்சேர்க்கும் பணி

மராட்டிய மாநிலம் புனே தபோடி பகுதியை சேர்ந்த 28 வயது ஜூனைத் முகமது என்பவரை கடந்த 24-ந் தேதி மராட்டிய பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர். இவர் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்களுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளார்.

அதுமட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து புதிய உறுப்பினர்களை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளார். இதற்காக அந்த பங்கரவாத அமைப்பிடம் இருந்து பணமும் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தான் பயங்கரவாத தடுப்பு படையினர் ஜூனைத் முகமதுவை கைது செய்தனர்.

தீவிர விசாரணை

இதைத்தொடர்ந்து இவருடன் தொடர்பில் உள்ள மற்றவர்களை பிடிக்கும் முயற்சியில் ஜம்மு-காஷ்மீரில் முகாமிட்டு மராட்டிய பங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஜூனைத் முகமதுவுடன் தொடர்பில் இருந்த முக்கிய நபர் ஒருவர் அங்குள்ள கிஷ்த்வார் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரை மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர். இவரை மும்பை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவருக்கும் ஜூனைத் முகமதுவுக்கு இருக்கும் தொடர்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story