மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மரணம்


மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மரணம்
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி நேற்று மரணம் அடைந்தார்.

மும்பை,

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி நேற்று மரணம் அடைந்தார்.

மகாத்மா காந்தியின் பேரன்

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி(வயது89). இவர் மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தி- சுசீலா தம்பதிக்கு 2-வது மகனாக தெற்கு ஆப்பிரிக்காவில் பிறந்தவர்.

மனைவி சுனந்தாவுடன் அமெரிக்காவில் குடியேறி அங்குள்ள பல்கலைக்கழகத்தில் ஆய்வு பணி மேற்கொண்டார். எழுத்தாளரான இவர் மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை அமெரிக்காவில் பரப்பினார். ஒரு சமூக-அரசியல் ஆர்வலராக தனது தாத்தா மகாத்மா காந்தியின் அடிச்சுவடுகளை பின்பற்றி வந்தார். இந்திய -அமெரிக்க நட்புணர்வு சங்க ஆர்வலரும் ஆவார்.

2007-ம் ஆண்டு அருண் காந்தியின் மனைவி சுனந்தா காந்தி மரணம் அடைந்தார். 2016-ம் ஆண்டு வரை நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டரில் வசித்து வந்த அவர், பின்னர் இந்தியாவுக்கு வந்தார்.

மரணம்

கோலாப்பூரில் தனது மனைவி சுனந்தா பெயரில் இயங்கி வரும் பெண் குழந்தைகளுக்கான இல்லத்தில் வசித்து வந்தார்.

வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை அருண் காந்தியின் உயிர் பிரிந்தது. இந்த தகவலை அவரது மகன் துசார் காந்தி தெரிவித்தார். அவரது இறுதி சடங்கு நேற்று மாலை கோலாப்பூரில் நடந்து முடிந்தது.

அருண் காந்தி மரணத்துக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

1 More update

Next Story