மாட்டுங்காவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.75 லட்சம் மோசடி செய்தவர் கைது - சூரத்தில் பிடிபட்டார்


மாட்டுங்காவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.75 லட்சம் மோசடி செய்தவர் கைது - சூரத்தில் பிடிபட்டார்
x
தினத்தந்தி 8 Oct 2023 7:00 PM GMT (Updated: 8 Oct 2023 7:01 PM GMT)

மாட்டுங்காவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.75 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்

மும்பை,

மும்பை மாட்டுங்காவில் கடந்த ஆண்டு பரேஷ் படேல் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து தாங்கள் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானம் தருவதாக அங்குள்ள பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறினர். மேலும் இதற்கான கவர்ச்சி திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.74 லட்சத்து 70 ஆயிரம் வரை வசூலித்தனர். இதன்பின்னர் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தம்பதி தலைமறைவாகி விட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மாட்டுங்கா போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பணத்துடன் தலைமறைவான பரேஷ் படேல் குஜராத் மாநிலம் சூரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று வாகன நிறுத்தம் அருகே பதுங்கி இருந்த அவரை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை மும்பைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோசடி வழக்கில் அவரது மனைவிக்கு தொடர்பு இருப்பதால் அவரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story