கட்டிட சிலாப் இடிந்து ஒருவர் பலி

மும்பையில் கட்டிட சிலாப் இடிந்து ஒருவர் பலியானார்
மாவட்ட செய்திகள்
மும்பை,
மும்பை மலாடு மேற்கு புறநகர் பகுதியில் ஜகாரியா சாலையில் கட்டிடம் ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. அந்த கட்டிடம் உள்ள பகுதியில் ராஜ் குமார் சோனி(வயது 31) என்பவர் இயற்கை உபாதையை கழிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த கட்டிடத்தின் சிலாப் இடிந்து அவரின் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராஜ் குமார் சோனி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கட்டிடத்தின் ஒப்பந்ததாரர் மற்றும் கட்டுமான அதிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






