சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கூடுதலாக 2 நாட்கள் நடைபெறும்- அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு


சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கூடுதலாக 2 நாட்கள் நடைபெறும்- அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு
x

மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் கூடுதலாக 2 நாட்கள் நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் கூடுதலாக 2 நாட்கள் நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

25-ந் தேதி வரை..

மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 17-ந் தேதி தொடங்கி, 23-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் சபாநாயகர் ராகுல் நர்வேகர், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் சட்டமன்ற குழு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை மேலும் 2 நாட்கள் நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி வருகிற 25-ந் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

காரணம் என்ன?

வருகிற 19-ந் தேதி தஹி ஹண்டி திருவிழா என்பதால் அன்று விடுமுறை. அடுத்து வார இறுதி நாட்கள் வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சட்டசபை கூட்ட நாட்கள் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏக்நாத் ஷிண்டே அரசு பதவி ஏற்ற பிறகு மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கடந்த மாத தொடக்கத்தில் சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அதன்பிறகு தற்போது 2-வது முறையாக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது.

நிராகரித்த சபாநாயகர்

சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே அணியினர் தான் சிவசேனா என அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. எனவே அலுவல் ஆய்வு குழுவில் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் மந்திரிகள் ததா புசே, உதய் சாமந்த் ஆகியோர் அலுவல் ஆய்வு குழு பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதேவேளையில் உத்தவ் தாக்கரே தரப்பில் இருந்து கட்சியின் கொறடா அஜய் சவுத்திரியை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை சபாநாயகர் ராகுல் நர்வேகர் நிராகரித்து விட்டார்.

-----------------

1 More update

Next Story