எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இழந்துவிட்டன - முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேச்சு


எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இழந்துவிட்டன - முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேச்சு
x
தினத்தந்தி 16 July 2023 7:15 PM GMT (Updated: 16 July 2023 7:15 PM GMT)

எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இழந்துவிட்டன, அவர்கள் குழப்பத்தில் உள்ளனர் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மும்பை,

எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இழந்துவிட்டன, அவர்கள் குழப்பத்தில் உள்ளனர் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற உள்ளது. இதையடுத்து நேற்று ஆளும் கட்சியினர் அழைப்பு விடுத்த தேநீர் விருந்தை காங்கிரஸ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இந்திநிலையில் சாயத்திரி விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

நம்பிக்கை இழந்துவிட்டது...

மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளை சேர்ந்த ஒருவரை தற்போது காணவில்லை. அவர்களை தேடவேண்டி உள்ளது. எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இழந்துவிட்டதாக தெரிகிறது. அவர்கள் குழப்பமடைந்து, திகைத்து நிற்கின்றனர். எவ்வாறாயினும் எதிர்க்கட்சிகளின் பலத்தை பொருட்படுத்தாமல் நாங்கள் குறைந்து மதிப்பிட மாட்டோம். மாநிலம் பல்வேறு துறைகளில் ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டை பெற்றுள்ளது. அரசின் நல்ல பணிகளை எதிர்க்கட்சிகளும் பாராட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பில் துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகளின் சார்பில் சட்டமேல்சபை தலைவர் அம்பாதாஸ் தன்வே, அரசின் பல்வேறு பிரச்சினைகளை பட்டியலிட்டு கடிதம் எழுதியுள்ளார் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், "கடிதம் எழுதுவதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஒரு பெரிய புத்தகத்தை எழுதி உள்ளன" என்று கிண்டல் செய்தார்.



Next Story