பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூட தடை


பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூட தடை
x
தினத்தந்தி 29 May 2023 6:45 PM GMT (Updated: 29 May 2023 6:45 PM GMT)

அடுத்த மாதம் 11-ந் தேதி வரை மும்பையில் 4 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

அடுத்த மாதம் 11-ந் தேதி வரை மும்பையில் 4 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் கூட தடை

மும்பையில் அடுத்த மாதம் 11-ந் தேதி வரை பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூட தடை விதித்து போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் பிறப்பித்து உள்ள உத்தரவில் :-

பொது அமைதிக்காகவும், பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கவும், சொத்துக்கள் சேதப்படுத்தப்படாமல் இருக்கவும் மும்பையில் அடுத்த மாதம் 11-ந் தேதி வரை 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட தடைவிதிக்கப்படுகிறது. 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பேரணியாக செல்லவும், சத்தமான ஸ்பீக்கர் பயன்படுத்தவும், இசைக்கருவிகள் பயன்படுத்தவும், பேண்டு வாத்தியம் இசைக்கவும், பட்டாசு வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருமணம், இறுதி சடங்குக்கு விலக்கு

திருமண நிகழ்ச்சி, இறுதி சடங்கு, நிறுவன, கூட்டுறவு சங்க, விடுதி கூட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல சினிமா பார்க்க தியேட்டர் அருகிலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் பொது மக்கள் கூட்டமாக நிற்க தடை எதுவுமில்லை. அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் அருகிலும் பொது மக்கள் நிற்க தடையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொது மக்கள் கூட தடை விதித்து உள்ள உத்தரவு குறித்து கேட்ட போது, இதுவழக்கமாக பிறப்பிக்கப்படும் உத்தரவு தான் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.


Next Story