ரொட்டியும், ஆடையும் மட்டுமல்ல கல்வியும், சுகாதாரமும் இன்றைய சமுதாயத்தில் அத்தியாவசியம் - மோகன் பகவத் பேச்சு

ரொட்டியும், ஆடையும் மட்டுமல்ல  கல்வியும், சுகாதாரமும் இன்றைய சமுதாயத்தில் அத்தியாவசியம் - மோகன் பகவத் பேச்சு
x
தினத்தந்தி 23 July 2023 6:45 PM GMT (Updated: 23 July 2023 6:46 PM GMT)

ரொட்டியும், ஆடையும் மட்டுமல்ல, கல்வியும், சுகாதாரமும் இன்றைய சமுதாயத்தில் அத்தியாவசியம் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

மும்பை,

ரொட்டியும், ஆடையும் மட்டுமல்ல, கல்வியும், சுகாதாரமும் இன்றைய சமுதாயத்தில் அத்தியாவசியம் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

நல்லது பற்றி அதிகம் பேசுகின்றனர்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று மும்பை காந்திவிலி பகுதியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

பல நேரங்களில் எதிர்மறையான விவாதங்கள் நடப்பது போல கேட்கிறது. ஆனால் நாடு முழுவதும் சென்று பார்த்தால், இந்தியாவில் நடக்கும் மோசமான நிகழ்வுகளை விட நல்ல விஷயங்கள் தான் 40 மடங்கு அதிகமாக பேசப்படுகிறது. அரசின் கொள்கைகள் மற்றும் அரசில் இடம்பெற்று உள்ள பொறுப்பானவர்களின் வேலை நாட்டின் எழுச்சிக்கு காரணமாக உள்ளது. சிலர் எதுவும் செய்யாமல் இருப்பதால், வேலைகள் சுமுகமாக நடக்கின்றன. அவர்கள் வேலை செய்தால் பிரச்சினை தான் ஏற்படும்.

கல்வி, சுகாதாரம் அத்தியாவசியம்

40 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட தற்போது நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆசை மக்கள் இடையே அதிகமாகி உள்ளது. அந்த ஆசை மேலும் அதிகரிக்க வேண்டும். நாம் உயர்ந்து வருகிறோம். ஆனால் இன்னும் சக்தி வாய்ந்தவர்களாக இல்லை. நாம் வளருவதை பார்க்க சிலர் விரும்பவில்லை. ரொட்டியும், ஆடையும் மட்டுமல்ல கல்வியும், சுகாதாரமும் இன்றை சமுதாயத்தில் அத்தியாவசியம் ஆகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story