சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த எங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் ஆர்வமாக உள்ளனர்- ஏக்நாத் ஷிண்டே பேச்சு


சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த எங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் ஆர்வமாக உள்ளனர்- ஏக்நாத் ஷிண்டே பேச்சு
x

சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த தங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் ஆர்வமாக இருப்பதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மும்பை,

சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த தங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் ஆர்வமாக இருப்பதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் ஆர்வம்

சிவசேனா கட்சியின் தசரா பொதுக்கூட்டம் ஆண்டுதோறும் தாதர் சிவாஜிபார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. தற்போது கட்சி 2 ஆக உடைந்து உள்ளதால், உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருதரப்பினரும் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த விண்ணப்பித்து உள்ளனர். முதலில் விண்ணப்பித்து இருப்பதால் உத்தவ் தாக்கரே அணிக்கு சிவாஜிபார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த தங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் ஆர்வமாக உள்ளனர் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டம் சிவாஜி பார்க் மைதானத்தில் பாரம்பரியப்படி நடைபெறும். எங்கள் கூட்டத்தில் அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. நாங்கள் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு உள்ளோம். எது நடந்தாலும் அது விதிகளின்படி தான் நடைபெறும். ஆனால் பால்தாக்கரேவின் கொள்கைகளை முன்னெடுத்து செல்ல, சிவாஜிபார்க்கில் தான் கூட்டம் நடக்க வேண்டும் என எல்லோரும் விரும்புகின்றனர். இந்த விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்" என்றார்.

உத்தவ் அணி விண்ணப்பம்

இதற்கிடையே சிவாஜி பார்க்கில் பொதுக்கூ ட்டம் நடத்த் அனுமதி கிடைக்காத பட்சத்தில் பி.கே.சி. எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டத்தை நடத்த வசதியாக அதற்கு ஷிண்டே அணியினர் விண்ணப்பித்து இருந்தது.

இந்தநிலையில் எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் அடுத்த மாதம் 5-ந் தேதி கூட்டம் நடத்த உத்தவ் தாக்கரே அணியினரும் விண்ணப்பித்து உள்ளனர்.


Next Story