பிளாஸ்டிக் பேரலில் உடல் மீட்பு: சிறுமி கொலை வழக்கில் பீகார் தொழிலாளி கைது


பிளாஸ்டிக் பேரலில் உடல் மீட்பு: சிறுமி கொலை வழக்கில் பீகார் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

6 வயது சிறுமி பிளாஸ்டிக் பேரலில் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் தொழிலாளியை போலீசார் பீகார் மாநிலத்தில் வைத்து கைது செய்தனர்.

தானே,

6 வயது சிறுமி பிளாஸ்டிக் பேரலில் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் தொழிலாளியை போலீசார் பீகார் மாநிலத்தில் வைத்து கைது செய்தனர்.

சிறுமி உடல் மீட்பு

தானே மாவட்டம் பிவண்டி காமத்கர் பினே கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி தனது வீட்டில் இருந்து கடந்த 13-ந்தேதி காணாமல் போனாள். இதனால் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை. இது பற்றி போலீசில் புகார் அளித்து இருந்தனர். 2 நாட்கள் கழித்து சிறுமி வசித்து வந்த பக்கத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று கதவை உடைத்து பார்த்த போது பிளாஸ்டிக் பேரலில் இருந்த சிறுமியின் உடலை மீட்டனர்.

பீகாரில் சிக்கிய ஆசாமி

விசாரணையில் சிறுமியை கொலை செய்து உடலை பிளாஸ்டிக் பேரலில் வீசி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அந்த வீட்டில் வசித்து வந்த ஆசாமி குறித்து விசாரித்தனர். இவர் 31 வயது தொழிலாளி எனவும், அவர் பீகார் மாநிலத்திற்கு தப்பி சென்றதாகவும் தகவல் கிடைத்தது. இதன்பேரில் தனிப்படை போலீசார் தொழிலாளி பற்றிய விவரங்களை சேகரித்து பின்னர் பீகார் மாநிலம் சென்றனர். அங்கு பதுங்கி இருந்த தொழிலாளியை கைது செய்தனர். இவரை தானே அழைத்து வர நடவடிக்கை எடுத்து உள்ளனர். முழுமையான விசாரணை நடத்திய பிறகே அவர் சிறுமியை எதற்காக கொலை செய்தார் என்ற விவரம் தெரியவரும். சிறுமியை கொன்ற வழக்கில் பீகார் தொழிலாளி கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story