சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் மும்பையை யூனியன் பிரதேசமாக அறிவிக்க திட்டம் - நானா படோலே பகீர் குற்றச்சாட்டு

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் மும்பையை யூனியன் பிரதேசமாக அறிவிக்க திட்டம் - நானா படோலே பகீர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Sep 2023 7:15 PM GMT (Updated: 11 Sep 2023 7:16 PM GMT)

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மும்பையை யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம்சாட்டினார்.

மும்பை,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மும்பையை யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம்சாட்டினார்.

சிறப்பு கூட்டம்

வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. ஆனால் இந்த சிறப்பு கூட்டத்தில் நிகழ்ச்சி-நிரல் அறிவிக்கப்படவில்லை. இதில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

யூனியன் பிரதேசம்

கொரோனா மற்றும் மணிப்பூர் பிரச்சினைகளின்போது பிரதமர் மோடி சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் எதையும் கூட்டவில்லை. ஆனால் தற்போது மத்திய அரசாங்கத்தின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் மனநிலையின் அடிப்படையில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்படுகிறது. இந்த கூட்டத்தில் மும்பை நகரை மராட்டியத்தில் இருந்து பிரித்து, அதை யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மும்பை சர்வதேச நகரம் மற்றும் நாட்டின் நிதி தலைநகரமாக விளங்குகிறது. ஏர் இந்தியா, சர்வதேச நிதி சேவை மையம், வைர சந்தை போன்றவை மும்பையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை ஆகியவற்றை குஜராத்துக்கு மாற்றும் திட்டமும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story