ரெயில் வழித்தடம் அமைக்கும் பணி: பேலாப்பூர்-பன்வெல் இடையே 32 சிறப்பு பஸ்கள் - மாநகராட்சி அறிவிப்பு


ரெயில் வழித்தடம் அமைக்கும் பணி: பேலாப்பூர்-பன்வெல் இடையே 32 சிறப்பு பஸ்கள் - மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2023 7:15 PM GMT (Updated: 13 Sep 2023 7:15 PM GMT)

ரெயில் வழித்தடங்கள் அமைக்கும் பணியால் பேலாப்பூர்-பன்வெல் இடையே 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.

நவிமும்பை,

ரெயில் வழித்தடங்கள் அமைக்கும் பணியால் பேலாப்பூர்-பன்வெல் இடையே 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.

வழித்தடம் அமைக்கும் பணி

பன்வெல் ரெயில் நிலையத்தில் பிரத்யேக சரக்கு ரெயில் போக்குவரத்திற்காக புதிதாக 2 வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணி கடந்த ஆகஸ்ட் 18-ந் தேதி ெதாடங்கியது. பணியை வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. பேலாப்பூரில் இருந்து பன்வெல் வரையில் இரவு 12.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரையில் பணிகள் நடைபெற உள்ளதால் அந்த காலக்கட்டத்தில் 3 முதல் 4 மணி நேரம் பன்வெலில் இருந்து சி.எஸ்.எம்.டி. செல்லும் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மாறாக பேலாப்பூரில் இருந்து மின்சார ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

இதனால் பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் நவிமும்பை மாநகராட்சி சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுபற்றி போக்குவரத்து மேலாளர் யோகேஷ் கடுஸ்கர் கூறுகையில், "மத்திய ரெயில்வே சார்பில் பராமரிப்பு பணி தொடர்பாக கடிதம் வந்துள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு 32 சிறப்பு பஸ் சேவைகள் பேலாப்பூரில் இருந்து பன்வெலுக்கு சயான்-பன்வெல் நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும்" என்றார்.


Next Story