பாந்திராவில் முதியவரை துப்பாக்கியால் சுட்ட ரெயில்வே ஊழியர் கைது- உத்தரபிரதேசத்தில் சிக்கினார்

பாந்திராவில் முதியவரை துப்பாக்கியால் சுட்ட ரெயில்வே ஊழியர் கைது- உத்தரபிரதேசத்தில் சிக்கினார்
x

பாந்திராவில் முதியவரை துப்பாக்கியால் சுட்ட ரெயில்வே ஊழியரை போலீசார் உத்தரபிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.

மும்பை,

பாந்திராவில் முதியவரை துப்பாக்கியால் சுட்ட ரெயில்வே ஊழியரை போலீசார் உத்தரபிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.

துப்பாக்கியால் சுட்டார்

மும்பை பாந்திராவை சேர்ந்தவர் சாம்சேத் அகமது (வயது61). இவர் ரெயில்வேயில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் மேக்தாப் அலிகான் என்பவரிடம் கடனாக பணம் கொடுத்து இருந்தார். சில நாள் கழித்து கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு மேக்தாப் அலிகானிடம் கேட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் முதியவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயமடைந்த சாம்சேத் அகமதுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசில் சிக்கினார்

இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து துப்பாக்கியால் சுட்ட மேக்தாப் அலிகானை தேடிவந்தனர். இந்தநிலையில் அவர் உத்தரபிரதேச மாநிலம் பிரதாப் கட் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன் அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story