பெண்ணின் உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு


பெண்ணின் உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு
x

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்பு தானத்தால் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

புனே,

புனேயை சேர்ந்த பெண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கமாண்ட் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பெண்ணிற்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் அறிந்தனர்.

இதனால் குடும்பத்தினரிடம் பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து டாக்டர்கள் கடந்த 15-ந்தேதி அறுவை சிகிச்சை நடத்தி பெண்ணின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் கல்லீரலை அகற்றினர். இதையடுத்து தானமாக பெற்ற சிறுநீரகங்களை அங்கு சிகிச்சை பெற்று வரும் 2 ராணுவ வீரர்களுக்கும், கண்கள் ஆயுதப்படை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் 2 நோயாளிகளுக்கும் தானம் வழங்கப்பட்டது. பின்னர் புனே ருபி ஹால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு நோயாளிக்கு கல்லீரல் தானமாக கொடுக்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்பு தானத்தால் 5 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர்.


1 More update

Next Story