பெண்ணிடம் நூதன முறையில் ரூ.12.47 லட்சம் அபேஸ்


பெண்ணிடம் நூதன முறையில் ரூ.12.47 லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 18 March 2023 7:15 PM GMT (Updated: 18 March 2023 7:22 PM GMT)

தானே,

தானேயை சேர்ந்த 36 வயது பெண்ணுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமூகவலைத்தளம் மூலம் மலேசியாவை சேர்ந்த ஒருவரின் தொடர்பு கிடைத்தது. இதில் அந்த நபர், பெண்ணிடம் தான் லண்டனில் வேலை பார்த்து வருவதாக தெரிவித்தார். நாளடைவில் அந்த பெண்ணுக்கு பரிசு அனுப்புவதாக கூறினார். சில நாட்கள் கழித்து பெண் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு, டெல்லியில் உள்ள சுங்கவரித்துறை அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், பரிசு பொருட்கள் அடங்கிய பார்சல் வந்து இருப்பதாகவும் கூறினார். மேலும் பரிசு பொருளை பெற வேண்டுமெனில் சேவை கட்டணம் ெசலுத்த வேண்டும் என தெரிவித்தார். இதுபோல வேறு சிலரும் சுங்கத்துறை அதிகாரிகள் என அந்த பெண்ணிடம் பேசினர். இதனை நம்பிய அப்பெண் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் கூறிய வங்கிக்கணக்கில் ரூ.12 லட்சத்து 47 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் பார்சல் எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்தார்.

இது பற்றி தானே காப்பூர்பாவடி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து, நூதன் முறையில் பெண்ணிடம் பணம் அபேஸ் செய்த கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story