மும்பையில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது


மும்பையில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 19 March 2023 7:00 PM GMT (Updated: 2023-03-20T00:30:34+05:30)

ரூ.257 கோடி செலவில் மும்பையில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணியை மும்பை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

மும்பை,

ரூ.257 கோடி செலவில் மும்பையில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணியை மும்பை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

தூர்வாரும் பணி தொடங்கியது

மும்பையில் ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படும். ஆண்டு தோறும் சுமார் 10 லட்சம் மெட்ரிக் டன் குப்பை, சகதி கால்வாய்களில் இருந்து தூர்வாரப்படும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் சாக்கடை, மழைநீர் கால்வாய்கள் தூர்வாரும், சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. தாமதமாக வேலை தொடங்கப்பட்டதால் 24 மணி நேரமும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தநிலையில் இந்த ஆண்டு கால்வாய் தூர் வாரும் பணியை மாநகராட்சி முன்கூட்டியே தொடங்கி உள்ளது.

ரூ.257 கோடி செலவு

இதுெதாடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டு தாமதமாக தூர்வாரும் பணிகள் தொடங்கியது. எனவே பணிகளை முடிக்க 3 ஷிப்டுகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். எனவே அதை தடுக்க இந்த ஆண்டு முன்கூட்டியே பணிகளை தொடங்க உள்ளோம். ரூ.257 கோடி செலவில் பணிகள் நடைபெறும். மித்தி நதியை தூர்வார மட்டும் ரூ.82 கோடி செலவாகும்.

ஒப்பந்ததாரர்கள் பணிகளை முடித்த பிறகு அதை நாங்கள் ஆய்வு செய்வோம். பணிகள் நடந்தற்கான படங்கள், வீடிேயாக்களை பார்த்த பிறகு தான் அவர்களுக்கான பணம் வழங்கப்படும்." என்றார்.


Next Story