ரகசிய சந்திப்பின் போது மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்துக்கு அஜித்பவாரை சரத்பவார் அழைத்து இருப்பார்; சஞ்சய் ராவத் எம்.பி. பேட்டி


ரகசிய சந்திப்பின் போது மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்துக்கு அஜித்பவாரை சரத்பவார் அழைத்து இருப்பார்; சஞ்சய் ராவத் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 13 Aug 2023 7:30 PM GMT (Updated: 13 Aug 2023 7:31 PM GMT)

ரகசிய சந்திப்பின் போது மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்துக்கு அஜித்பவாரை சரத்பவார் அழைத்து இருப்பார் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மும்பை,

ரகசிய சந்திப்பின் போது மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்துக்கு அஜித்பவாரை சரத்பவார் அழைத்து இருப்பார் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் 2 ஆக உடைந்தது. அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா கூட்டணியில் இணைந்து துணை முதல்-மந்திரி ஆனார். சரத்பவார் தனது ஆதரவாளர்களுடன் இந்தியா கூட்டணியில் உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்கள் புனேயில் ரகசியமாக சந்தித்து பேசியது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் ரகசிய சந்திப்பின் போது, மும்பையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள அஜித்பவாருக்கு சரத்பவார் அழைப்பு விடுத்து இருப்பார் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

அரசியலில் எதுவும் நடக்கலாம்

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:- ஏக்நாத் ஷிண்டே அரசில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. துணை முதல்-மந்திரிகள் அஜித்பவார், தேவேந்திர பட்னாவிஸ் கூட அதிருப்தியில் தான் உள்ளனர். முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், மோடியும் சந்திக்கும்போது, அஜித்பவாரும், சரத்பவாரும் சந்திக்க கூடாதா?. நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு, சரத்பவார் தன்னுடைய நிலைப்பாட்டை சில நாட்களில் தெளிவுப்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம். மீண்டும் மகாவிகாஸ் கூட்டணியில் வந்து சேருமாறு சரத்பவார், அஜித்பவாருக்கு அழைப்பு விடுத்து இருக்கலாம். அரசியலில் எதுவும் நடக்கலாம். உத்தவ் தாக்கரே, அமித்ஷாவை சந்தித்து மீண்டும் கூட்டணியில் சேர்ந்தபோது, மீண்டும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதிகாரம் சரிசமமாக பகிர்ந்து கொள்ளப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை. அப்படி செய்து இருந்தால் 2019-ல் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆகி இருப்பார். வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். 2024-ல் ஒட்டு மொத்த தேசமும் ராகுல் காந்தியுடன் இருக்கும். அமேதி, வாரணாசி, ரேபரேலி தொகுதியில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story