வசாயில் ஓட்டல் அறையில் பாடகர் குத்திக்கொலை; உடன் தங்கி இருந்தவர் வெறிச்செயல்
வசாயில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தங்கியிருந்த பாடகரை உடன் தங்கியிருந்தவரால் குத்திக்கொலை செய்யப்பட்டார்
வசாய்,
பால்கர் மாவட்டம் வசாயில் உள்ள ஓட்டல் ஒன்றில் பாடகரான ராதா கிருஷ்ணன் (வயது58) என்பவர் ராஜூ ஷா (55) என்பவருடன் ஒரே அறையில் தங்கி இருந்தார் நேற்று முன்தினம் இரவு ராதாகிருஷ்ணன் பாடல்களை பாடியதாக தெரிகிறது. இதனால் உடன் இருந்த ராஜூ ஷா எரிச்சல் அடைந்தார். பாடுவதை நிறுத்துமாறு எச்சரித்தார். இதனை கேட்காததால் ஆத்திரமடைந்த ராஜூ ஷா கத்தியால் ராதா கிருஷ்ணனை சரமாரியாக குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜூ ஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story