அரசின் சிறந்த திட்டங்களால் சிலருக்கு வயிற்று எரிச்சல் - உத்தவ் தாக்கரே மீது ஷிண்டே தாக்கு


அரசின் சிறந்த திட்டங்களால் சிலருக்கு வயிற்று எரிச்சல் - உத்தவ் தாக்கரே மீது ஷிண்டே தாக்கு
x
தினத்தந்தி 12 Sep 2023 7:45 PM GMT (Updated: 12 Sep 2023 7:45 PM GMT)

அரசின் சிறந்த திட்டங்களால் சிலர் வயிற்று எரிச்சல் அடைந்து இருப்பதாக உத்தவ் தாக்கரேயை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சாடினார்.

மும்பை,

அரசின் சிறந்த திட்டங்களால் சிலர் வயிற்று எரிச்சல் அடைந்து இருப்பதாக உத்தவ் தாக்கரேயை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சாடினார்.

வீடு தேடி அரசு

ஜல்காவ் மாவட்டம் பச்சோரா தாலுகாவில் நடந்த 'வீடு தேடி அரசு' திட்ட நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார். விவசாயிகள், பெண்களுக்கு நெல் அறுவடை எந்திரம், ஆட்டோக்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கலந்து கொண்டார். விழாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:- முந்தைய அரசு வளர்ச்சி பணிகளை முடக்கி போட்டது. ஆனால் நாங்கள் வளர்ச்சி பணிகளை முடுக்கி விட்டு உள்ளோம். முந்தைய முதல்-மந்திரி (உத்தவ் தாக்கரே) கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து வேலை செய்தார். ஆனால் நான் மக்களை நேரில் சந்திக்கிறேன். அரசின் திட்டங்களும் வீடு தேடி செல்கிறது.

வயிறு எரிகிறது

அரசின் சிறந்த வேலைகளை பார்த்து சிலருக்கு வயிறு எரிகிறது. அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. உங்களுக்கு (உத்தவ் தாக்கரே) முதல்-மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள்?. வீடு தேடி அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதேபோல வீடு தேடி டாக்டர் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story