மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை; தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை

மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை; தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Sep 2023 7:15 PM GMT (Updated: 25 Sep 2023 7:16 PM GMT)

மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்து உள்ளார்.

மும்பை,

மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்து உள்ளார்.

அன்னாசாகேப் நூற்றாண்டு கூட்டம்

நவிமும்பையில் நடந்த சுமை தூக்கும் தொழிலாளர்களின் மறைந்த தலைவர் அன்னாசாகேப் பாட்டீல் பிறந்தநாள் நூற்றாண்டு பொது கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:- சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு எதிராக சட்டம் இயற்ற அரசு முயற்சி செய்யவில்லை. பழைய சட்டத்தில் தான் திருத்தம் செய்து உள்ளது. அந்த சட்டம் 50 ஆண்டு பழமையானது.

கடும் நடவடிக்கை

போலி மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களால் பல தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டன. 25 சதவீதம் கமிஷன் பெறும் போலி சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நவிமும்பை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். மிரட்டி பணம் பறிக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story