12-ம் வகுப்பு தேர்வில் தோல்வியால் மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை


12-ம் வகுப்பு தேர்வில் தோல்வியால் மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை
x

புனேயில் 12-ம் வகுப்பு பொது தேர்தவில் தோல்வி அடைந்ததால் மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சோக சம்பவம் நடந்து உள்ளது.

மாவட்ட செய்திகள்

புனே,

புனேயில் 12-ம் வகுப்பு பொது தேர்தவில் தோல்வி அடைந்ததால் மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சோக சம்பவம் நடந்து உள்ளது.

மாணவன் தற்கொலை

புனே கோத்ருட், ஷர்வந்தர் காலனியை சேர்ந்தவர் நிக்கில் நாயக் (வயது19). 12-ம் வகுப்பு மாணவன். இன்று பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அவன் தோல்வி அடைந்து உள்ளான். இதனால் விரக்தி அடைந்த மாணவன் அவன் வசிக்கும் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றான். பின்னர் அவன் அங்கு இருந்து கீழே குதித்தான். இதில் மாணவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதற்கிடையே மாணவன் குதித்த போது, அங்கு நின்ற சேகர் லாகு (30) மீது விழுந்தான். இதில் சேகர் லாகு படுகாயமடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்பத்தினர் அதிர்ச்சி

தற்கொலை செய்து கொண்ட மாணவன் நிக்கில் நாயக்கிற்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருந்தது. மேலும் அவன் ஜிம்மிற்கு சென்று உடலை கட்டுகோப்பாக (பாடி பில்டிங்) வைக்க பயிற்சியையும் தொடங்கி இருக்கிறான். இதேபோல மாணவன் எப்போதும் அமைதியாக இருப்பான் என அவனது நண்பர்கள் கூறினர்.

மாணவன் நிக்கில் நாயக்கின் தந்தை சமையல்காரராக உள்ளார். மாணவனின் தற்கொலை சம்பவம் அவனது குடும்பத்தினர் மற்றும் புனே பகுதியை சேர்ந்தவர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story