பிரதமர் மோடி செல்ல இருந்த சாலையில் டிரோன் பறக்கவிட்ட கட்டுமான அதிபர் மீது வழக்குப்பதிவு


பிரதமர் மோடி செல்ல இருந்த சாலையில் டிரோன் பறக்கவிட்ட கட்டுமான அதிபர் மீது வழக்குப்பதிவு
x

பிரதமர் மோடி செல்ல இருந்த சாலையில் டிரோன் பறக்கவிட்ட கட்டுமான அதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை வந்தார். அவர் தென்மும்பை பகுதியில் இருந்து பெடடர் ரோடு வழியாக பி.கே.சி. செல்ல இருந்தார். எனவே கடந்த திங்கட்கிழமை மோடி பயணம் செய்ய இருந்த சாலையை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பெடடர் ரோடு பகுதியில் டிரோன் பறந்ததாக சிலர் போலீசாரிடம் கூறினர். மோடி செல்ல இருந்த சாலையில் டிரோன் பறந்ததால் பாதுகாப்பு பிரிவினர் இடையே பதற்றம் ஏற்பட்டது. மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு டிரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

இதற்கிடையே காம்தேவி போலீசார் மர்ம டிரோன் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரபல கட்டுமான அதிபர் அவருக்கு சொந்தமான இடத்தை டிரோன் பயன்படுத்தி படம் எடுத்தது தெரியவந்தது. அவர் டிரோன் பயன்படுத்த போலீசாரிடம் முன் அனுமதி பெற்று இருக்கிறார். எனினும் அவர் டிரோன் பயன்படுத்தியதில் விதி மீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


1 More update

Next Story