சாக்கிநாக்கா கற்பழிப்பு, கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்- அரசு தரப்பு கோர்ட்டில் வாதம்


சாக்கிநாக்கா கற்பழிப்பு, கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்- அரசு தரப்பு கோர்ட்டில் வாதம்
x

சாக்கிநாக்காவில் பெண் கற்பழித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு கோர்ட்டில் கோரிக்கை வைத்துள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

சாக்கிநாக்காவில் பெண் கற்பழித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு கோர்ட்டில் கோரிக்கை வைத்துள்ளது.

கற்பழித்து கொலை

மும்பையை சேர்ந்தவர் மோகன் சவுகான். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை சாக்கிநாக்கா பகுதியில் தனியாக நின்று கொண்டு இருந்த 34 வயது பெண்ணை வலுக்கட்டாயமாக அப்பகுதியில் நின்றுகொண்டு இருந்த ஒரு வாகனத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக கற்பழித்தார்.

இதன்பின்னர் ரத்தவெறி பிடித்த அவர் அங்கிருந்த இரும்பு கம்பி ஒன்றை அந்த பெண்ணின் அந்தரங்க பாகத்தில் குத்தி கொடுமைப்படுத்தி உள்ளார்.

இதில் அதிக ரத்த போக்கு காரணமாக பாதிக்கப்பட்ட அந்த பெண் ராஜவாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மோகன் சவுகானை கைது செய்த போலீசார் அவர் மீது தின்தோஷி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

தூக்கு தண்டனை

வழக்கு விசாரணையில் மோகன் சவுகான் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. எனவே அவர் குற்றவாளி என கடந்த 30-ந் தேதி அறிவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அரசு தரப்பு அவருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

அரசு தரப்பு தனது வாதத்தில், "இது ஒரு பெண்ணுக்கு எதிரான குற்றம். அதுவும் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்ணுக்கு எதிரான குற்றம். இது மிகவும் தீவிரமானது. இரவு தனியாக இருந்த ஒரு பெண் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் சம்பவம், மும்பை போன்ற பெருநகரத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.

எனவே இந்த வழக்கு அரிதிலும், அரிதான வழக்கிற்கு முற்றிலும் பொருத்தி போகிறது. எனவே குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகப்பட்ச தண்டனையாக தூக்குதண்டனை வழங்கவேண்டும்" என கோரிக்கை வைத்தது.

இந்த வழக்கில் நாளை (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.


Next Story